டிவிகேவால் தான் கரு கலைந்ததா ஜூலி!! வெளித்து வாங்கிய நடிகர்..
ஜூலி
ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் முலம் பிரபலமானவர் தான் ஜூலி. ஒருசில படங்களில் நடித்து வந்த ஜூலி, தேர்தல் சமயத்தில் தற்போதைய முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யை கடுமையாக விமர்சித்து வீடியோவை வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜூலி, தன்னை சோசியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சித்ததாகவும் ஆபாசமாக தாக்கியதாகவும் கூறி குற்றம் சாட்டினார்.

அந்த மன அழுத்தம் காரணமாக எனக்கு கருசிதைவு ஏற்பட்டதாகவும் தன்னுடைய குழந்தையை இழந்துவிட்டதாகவும் அதற்கு விஜய் தான் காரணம் என்று கண்ணீருடன் பேசியிருந்தார்.
அருண் ராஜன்
இந்நிலையில் நடிகர் அருண் ராஜன், ஜூலியின் அந்த கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் நீங்கள் சாதாரணமாக பேசவில்லை, மிகவும் கடுமையான கருத்துகளை வெளியிட்டீர்கள். அதற்கு மக்கள் எதிர்வினை கொடுத்தார்கள். அதை முழுவதும் டிவிகே மீது சுமத்துவது சரியல்ல. நீங்கள் 8 பேர் மீது புகார் கொடுத்திருக்கிறீர்கள்.
அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். என்னால் உங்கள் மீது வழக்கு போட முடியாதா? சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு தெரியும். நீங்கள் ஒரு பெண், இப்போதுதான் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்காக நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
இதோடு உங்கள் நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பேசிவிட்டு பெண்கள் என்ற வார்த்தைக்கு பின் ஒளிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பேசிய சில கருத்துகள் பல குடும்பங்களிலுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மனதளவில் பாதித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.