சமந்தாவுக்கு துரோகம் செய்தேனா!! முன்னாள் கணவர் அதிரடி ஆழன்..
நாக சைதன்யா - சமந்தா
நடிகர் நாகருஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த 4 வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்குப் பின் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா.

அதன்பின் நடிகை சமந்தா படங்களில் கவனம் செலுத்தியதை அடுத்து கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் முதல் திருமணத்தில் சமந்தாவை நாக சைதன்யா தான் ஏமாற்றிவிட்டார் என்று பல கருத்துக்களை கூறி வந்தனர். தற்போது அப்படி பதிவிட்டவர்கள் மீது நாக சைதன்யா வழக்கு தொடர்ந்துள்ளாராம்.
அதாவது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாக சைதன்யா தொடர்ந்துள்ள வழக்கில், என்னுடைய முன்னாள் மனைவி என் பெயரை குறிப்பிட்டு பொய்யான தகவல்களை தொடர்ந்து யூடியூப்பில் பரப்பும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் என் பெயரை பயன்படுத்தி ஆபாச இணையதளங்களில் வீடியோக்களும் வருகின்றது.

அவற்றையும் நீக்க வேண்டும் இதை பர்சனாலிவ்ட்டி ரைட்ஸ் பாதுகாக்க மட்டுமே வழக்கா பதிவு செய்திருக்கிறேன் நாகசைதயா தெரிவித்துள்ளார்.