வாய்ப்பு வாங்கி கொடுத்ததே ஆர்யா தான்.. ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சாயிஷா
சாயிஷா
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களை நடித்து முன்னணிக்கு வர இருந்த நேரத்தில் நடிகர் ஆர்யாவை திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சாயிஷா. அவர்கள் வயது வித்தியாசம் பற்றி அந்த நேரத்தில் அதிகம் விமர்சனம் எழுந்தது.
ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு ஒரு குழந்தையும் தற்போது இருக்கிறது. இந்த நிலையில் சிம்புவின் பத்து தல படத்தில் ராவடி என்ற ஐட்டம் பாடலுக்கு செம கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார் சாயிஷா.
ஆட சொன்னதே ஆர்யா தான்..
திருமணத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்க ஐட்டம் பாடலை தேர்ந்தெடுத்தது ஏன் என சாயிஷாவை பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அது பற்றி பிரெஸ் மீட்டில் பேசிய சாயிஷா அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்ததே ஆர்யா தான் என கூறி இருக்கிறார்.
பத்து தல படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆர்யாவிடம் 'நான் ஒரு பாடல் எடுக்க போகிறேன், அதற்கு நடிகை தேடிக்கொண்டிருக்கிறேன்' என கூறினாராம். அதற்க்கு ஆர்யா 'சாயிஷாவிடம் கேளுங்கள்' என கூறி மனைவி சாயிஷாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார்.
இந்த ஐட்டம் டான்ஸ் ஆடியதற்காக சாயிஷாவுக்கு 40 லட்சம் ருபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.