ஒரு வழியா அந்த பொண்ணை ஏமாற்றியது நானில்லை! ஈழப்பெண் வழக்கில் இருந்து தப்பித்த ஆர்யா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. நடிகை சாயிஷாவை திருமணம் செய்ததற்கு முன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் எனவும் 71 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் எனவும் ஆர்யா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக ஆர்யாவிற்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை நடித்தி வந்தனர் சிபிசிஐடி போலிசார்.
ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ பெண்ணான வித்ஜா நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் கூறி 71 லட்சம் பணம் வாங்கினார். கடைசியில் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்ரினார் என்று மனுவில் கூறியிருந்தார். தனக்கு அந்த பெண் யாரென்றே தெரியாது என்று வாக்குமூலத்தில் தெரிவித்து வந்த நிலையில், ஆர்யாவை போல் புளியந்தோப்பை சேர்ந்த இருவர் ஏமாற்றியுள்ளதாக சிபிசிஐடி போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனி பெண்ணை முகமது அர்மான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹூசைனி என்பவரையும் கைது செய்து வழக்கு பதிவிட்டனர். இதுகுறித்து ஆர்யா உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்த சென்னை காவல் ஆணையர் , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீ சாருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் மன அதிர்ச்சியில் இருந்ததாகவும் என்னை நம்பியவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
VFN9G4
