ஆர்யாவை உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை அபர்ணதியா இது!! இன்னும் அதை மறக்கவே இல்லையாம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் 2018ல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தனக்கான பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகிய இந்நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
அதில் ஆர்யாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்தவர் அபர்ணதி. கிராமத்தில் இருந்து வந்த அபர்ணதி ஆர்யாவிற்கு மிகவும் பிடித்தவராக இருந்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டிப்போட்ட யாரையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் ஆர்யா. நிகழ்ச்சிக்கு பின் ஆர்யாவை தன்னால் மறக்கமுடியாது என்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பெயரை abarnathi_6ya என்று வைத்துள்ளார்.
இன்று வரையும் ஆர்யாவை மறக்காமல் இருக்கிறாராம் அபர்ணதி. இதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்து ஜெயில், தேன் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார் அபர்ணதி.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அபர்ணதிக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.