ஆர்யாவின் முன்னாள் காதலி சீதா லட்சுமியா இது? வாய்ப்பில்லாமல் இப்படி மாறிட்டாங்க..

Arya Sayyeshaa
By Edward May 22, 2022 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய ஆர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் இருந்தார்.

அவரின் சினிமா வாழ்க்கையில் நான் கடவுள், மதராசப்பட்டினம், ராஜா ரானி, அவன் இவன், ஆரம்பம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது. இதன்பின் முன்னணி நடிகரில் அதிக சம்பளம் வாங்கும் லிஸ்ட்டிலும் இணைந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பெண் பார்க்கும் வேலையில் ஈடுபட்டார். 16 இளம்பெண்கள் போட்டியிட்ட இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை ஈர்த்த 3 பேர் இறுதியில் தேர்வானார்கள்.

அதில் ஒருவர் தான் மலையாளப்பெண் சீதா லட்சுமி. ஆர்யா மீது அதிக காதல் வைத்து நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி மக்கள் மனதையும் ஈர்த்தார். பின் ஆர்யா யாரையும் திருமணம் செய்ய முடியாது என்று கூறி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஏமாற்றினார்.

இதன் பின் வாய்ப்பிற்காக சீதா லட்சுமி போட்டோஷூட்டில் ஆர்வத்தை செலுத்து வருகிறார். மாடலிங்துறையிலும் இருந்து வரும் சீதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.