ஆர்யாவுடன் ராஷிகண்ணாவை இப்படி ஒரு குத்தாட்டம் போடவைத்த பிரபல இயக்குநர்! ஷாக்காகும் ரசிகர்கள்..
திரில்லர் கலந்த பேய் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அப்படியாக ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒரு ஜார்னரை மையமாக வைத்து படங்களை எடுப்பார்கள். அப்படி பேய் படங்களை பிரம்மாண்ட முறையில் எடுத்து வருபவர் இயக்குநர் சுந்தர் சி.
ஆரம்பகால சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியபின் நடிப்பிலும் இரங்கினார் சுந்தர் சி. சமீப சில ஆண்டுகளாக பேய் கதையை எழுதி வெளியிட்டு வருகிறார். அதில் அரண்மனை அரண்மனை 2, இருட்டு உள்ளிட்ட படங்களும் சீரியல்களும் பெரிய ஹிட் கொடுத்து வருகிறது. அந்தவரிசையில் அரண்மனை 3 ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு பாடல் மேக்கில் வெளியாகியுள்ளது. ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
அப்படத்தின் ரடட படா என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது. அதிலும் நடிகை ராஷி கண்ணாவுடன் நடிகர் ஆர்யா போடும் ஆட்டம் வைரலாகி வருகிறது.