ஆர்யா - சாயிஷாவின் மகள் ஆரியனாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே..
Arya
Sayyeshaa
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷா மீது காதலில் இருந்து இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.
இதற்கு முன் தனக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கும், எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
அந்நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த மூன்று பெண்களை கூட அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.
அதன்பின் வெளிநாட்டு பெண்ணிடம் பண மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கினார்.
இதற்கிடையில் கொரோனா காலக்கட்டத்தில் 2021ல் ஆரியானா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆர்யா - சாயிஷா.
சமீபத்தில் தன் மகளின் புகைப்படத்தை வெளியில் காட்டியிருந்தார் சாயிஷா. தற்போது 3 வயதை எட்டவுள்ள ஆரியானாவுடன் துபாயில் ஷாப்பிங் சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சாயிஷா.