கஞ்சா இருக்கா, கொக்கைன் இருக்கா : ஆர்யன் கான் அனன்யா பாண்டே வாட்ஸாப் சாட்டில் அம்பலம்!

aryan khan ananya panday
By Tony Oct 26, 2021 10:45 AM GMT
Report

 பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானின் மகன் தான் ஆர்யன் கான். 23-ஏ வயதான இவர் நடிகராக இதுவரை சினிமாவில் கால்பதிக்கவில்லை.

ஆனால் என்றும் இல்லாத வகையில் சமீபத்தில் மும்பை சொகுசு கப்பலில் போதைபொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது ஆர்யன் கைதானதால் இந்தியா மற்றும் அல்லாமல் உலகம் முழுவதும் பேசப்படும் அளவில் பிரபலமாகியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 3-ம் தேதி NCBயாள் கைது செய்யப்பட்டு இதுவரை ஜாமின் பெறமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதின் போது கைப்பற்றப்பட்ட இவரது செல்போன் மூலம் ஆர்யனுக்கு எதிராக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும் NCBயின் விசாரணை வளையத்தில் வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் ஆர்யன் கான் அனன்யா பாண்டே உரையாடிய வாட்ஸாப் சாட்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன் படி இருவரும் கஞ்சா கொக்கைன் பற்றி பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது.