அரைகுறை டான்ஸுக்கு ஜொள்ளுவிடுவீங்க..10, 100 ரூபா பணத்துக்கு!! நடிகை சந்தியா பதிலடி..

Tiruvannamalai Tamil Actress Actress
By Jai Oct 02, 2026 09:56 AM GMT
Report

நடிகை சந்தியா

திருவண்ணாமலை கோவிலுக்கு அசாம் மாநிலத்திலிருந்து 8 வயதுடைய ஆண் யானையை கொண்டு வந்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன் ருக்கு என்ற கோவில் யானை உயிரிந்த நிலையில், தற்போது புது யானை கோவிலுக்கு கொண்டு வந்தது குறித்து நடிகை சந்தியா எதுக்கு யானை, பக்தி என்ற பெயரால் என்னென்ன செய்யப் போகிறார்களோ என்று கூறி வீடியோவை வெளியிட்டார். இதற்கு பலரும் சந்தியாவை கடுமையாக விமர்சித்தனர்.

அரைகுறை டான்ஸுக்கு ஜொள்ளுவிடுவீங்க..10, 100 ரூபா பணத்துக்கு!! நடிகை சந்தியா பதிலடி.. | Sandhya Reply Thiruvannamalai Temple Elephant

இந்நிலையில் மீண்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இடுப்பாட்டி டான்ஸ்

அதில், டிரெண்டாக வேண்டும் என்பதற்கு திருவண்ணாமலை யானை விவகாரம் குறித்து பேசாதீங்கன்னு சொல்றாங்க. அரைகுறையாக உடையணிந்து இடுப்பாட்டி டான்ஸ் ஆடுனா ஜொள்ளுவிட்டு பாக்குற ஆள் நீங்க. என் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறேன், அது எல்லாம் ரெஸ்க்யூ செய்யப்பட்ட விலங்கு.

திருவண்ணாமலைக்கு வந்த அந்த யானையை பார்க்கும்போது அதன் கண்கள் குழந்தையை போல இருக்கும்னு சொல்றாங்க, டேய் அது குழந்தைதான், உங்களுக்கு அது தெரியுமா? டொமஸ்டிக் அனிமல்ஸ், வைல்ட் அனிமல்ஸ் ஆகியவற்றுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாமல், தங்களுக்கு வசதியாக சில விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசக்கூடாது.

அரைகுறை டான்ஸுக்கு ஜொள்ளுவிடுவீங்க..10, 100 ரூபா பணத்துக்கு!! நடிகை சந்தியா பதிலடி.. | Sandhya Reply Thiruvannamalai Temple Elephant

ஒரு விஷயத்துக்கு ஒருவர் குரல் கொடுத்தால், அவரை பாடி ஷேமிங் செய்வது, தரக்குறைவாக விமர்சனம் செய்து, தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது ஏன்? மோசமான கமெண்ட்டுகளை போட்டவர்கள் அனைவரும் சாமி போட்டோவை வைத்து இருப்பவர்கள் தான். அவர்கள் தான் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கிறார்கள்.

உங்களுடைய கருத்துக்கும் மற்றொருவரின் கருத்துக்கும் வித்தியாச இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏன் இல்லை? ஒருவர் மாறுபட்ட கருத்தை சொன்னால், உடனே அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏன்? நான் தெலுங்குக்காரியாக இருந்தால் யானை பத்தி பேசக்கூடாதா?

இந்த நாட்டில் பிறந்தவர்கள் உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் மக்கள் பரவி வாழ்கிறார்கள், அதனால் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வந்தாலோ, கேரளாவுக்கு வந்தாலோ, வேறு எந்த மாநிலத்திற்கு சென்றாலோ அதை வைத்து அவருடைய கருத்தை கேள்விக்குறியாக்கக் கூடாது.

ஆனால் காட்டில் வாழ வேண்டிய யானை, அந்த யானையை கொண்டு வந்து, அது குட்டி யானையாக இருக்கும்போதே சங்கிலியை கட்டி அதன் நெற்றியில் பட்டையை போட்டு பத்து ரூபா, 100 ரூபா பணத்துக்காக கோவிலில் முதலில் எதற்கு யானை என்பதை சந்தித்து பேசுங்கள் என நடிகை சந்தியா வீடியோவை வெளியிட்டுள்ளார்.