கொரோனா சமயத்தில் நடிகைகளுடன் லிப்கிஸ்? மன்மதலீலை நடிகருக்கு அடித்த லக்
தமிழ் சினிமாவில் அடல்ட் சம்பந்தப்பட்ட பல படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அப்படி சூதுகவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான படம் மன்மதலீலை.
மாநாடு படத்திற்கு முன்பே தன் உதவி இயக்குனர் கதையாக இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அடல்ட் காமெடியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முழுக்க முழுக்க 18 வயதிற்குட் பட்டவர்கள் பார்க்கவே வேண்டாம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
படத்தில் நடித்த அனுபவங்களை கதாநாயகன் அசோக் செல்வன் பகிர்ந்து கொண்டுள்ளார். படம் முழுவதும் அதிக முத்தக்காட்சிகள். முதல் லாக்டவுன் முடிந்தபிறகு படத்தின் கதையை வெங்கட் பிரபு கூறினார்.
படப்படிப்பு ஆரம்பித்த போது எனக்கு கொரோனா வந்தது. அந்த சமயத்தில் தான் நடிகைகளுக்கு முத்தம் கொடுத்த காட்சியில் நடித்தேன் என்று கூறியுள்ளார். அப்படி முத்தம் கொடுத்த போது அவங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. படத்தின் கதை பிடித்திருக்கிறது. அதனால் தான் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.