40 கதை கேட்டு தூங்கிய அஷ்வினுக்கு ஆப்பு வைத்த மக்கள்.. ரொம்ப பாவம்யா நீ

Ashwin Kumar Lakshmikanthan
By Kathick May 26, 2022 03:10 PM GMT
Report

கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கேட்ட 40 கதைகளில் அனைத்திலும் தூங்கி விட்டேன் என்று அஷ்வின் கூறியது, இன்று வரை பெரும் சர்ச்சையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதன்முலம் நடிகர் அஸ்வின் பல இன்னல்களை சந்தித்து வந்தார்.

இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் அஷ்வின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்தை ஜீ தமிழ் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்திருந்தது.

இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இப்படம் 0.99 மோசமான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன்முலம் தற்போதுவரை அஷ்வின் சொன்ன விஷயத்தை மக்கள் மறக்கவில்லை என்று தெரிகிறது. இதன்பின், ஆவது அவர் இப்படி நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.