அழகா இருக்கேன்னு வாய்ப்பு தரல..உடல காட்டக்கூடாது!! நடிகை அஸ்ரிதா ஓபன் டாக்..
அஸ்ரிதா
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பா அம்மா என்ற தொடரில் நடித்து பிரபலமானார் அஸ்ரிதா. அதன்பின் கனா காணும் காலங்கள், மகராசி, பாக்கியலட்சுமி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்தார்.

என்னை அறிந்தால், கொரில்லா, சம்டைம்ஸ் போன்ற படங்களில் நடித்து வந்த அஸ்ரிதா, கடைசியாக தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எனக்கு போக ஆசை, என்னை கூப்பிட்டு இருக்கிறார்கள். என்னுடைய நெகட்டிவை உடைக்க வேண்டும். பிக்பாஸில் கலந்து கொண்டு டைட்டில் அடித்தால், அதில் வரும் பணத்தை வைத்து தயாரிப்பாளர் ஆகுவேன். ஏனென்றால் பெண் தயாரிப்பாளர்கள் குறைவு, அதனால் நான் தயாரிப்பாளராக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அழகா இருக்கேன்னு
மேலும் அவரிடன், நீங்கள் தவறவிட்ட பெரிய வாய்ப்புகள் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அஸ்ரிதா, நிறைய மிஸ் ஆகியிருக்கு, நான் அழகா இருக்கேன்னு சிலர் என்னை செலக்ட் பண்ணல.
அழகா இருந்தா பிரச்சனை, கலரா இருல்லன்னாலும் பிரச்சனை, இண்டஸ்ட்ரிக்கு என்னதான் வேண்டும்னா, ஹைதராபாத், பெங்களூரில் இருந்து வந்தா, ஹீரோயின்ஸா போட்டுவிடுவாங்க. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தன் திறமையை காட்டவேண்டும், ஆனால் உடலை காட்டக்கூடாது. அந்த அவசியம் கிடையாது, அது மாறினால் வாய்ப்பு தானாவே வரும் என்று அஸ்ரிதா தெரிவித்துள்ளார்.