துபாய்க்கு வேலைக்கு சென்று இந்திய மானத்தை கப்பலேற்றிய அசாம் நபர்! கைது செய்த போலீஸ்

Dubai Assam maradona watch
By Parthiban.A Dec 11, 2021 04:43 PM GMT
Report

இந்தியர்கள் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்வது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் அப்படி துபாய்க்கு செக்யூரிட்டி வேலைக்கு சென்று இருந்த அசாமை சேர்ந்த நபர் ஒருவர் கால்பந்து வீரர் மரடோனாவின் கைக்கடிகாரத்தை திருடி கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார்.

அவரை போலீசார் தற்போது கைது செய்திருக்கின்றனர். மரடோனாவின் லிமிடெட் எடிஷன் ஹுப்லாட் வாட்ச் உட்பட அவரது பல பொருட்களை பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் தான் வாஜித் உசேன் என்ற அந்த நபர் பணியாற்றி இருக்கிறார்.

சில நாட்கள் வேலை செய்த பிறகு தனது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என சொல்லி விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார். அவர் மரடோனாவின் வாட்சை திருடிய பிறகு தான் இந்தியாவுக்கு திரும்பி சென்றிருந்த என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவனை பற்றி அசாம் போலீசாருக்கு துபாய் போலீஸ் தகவல் அனுப்பி கைது செய்ய வைத்திருக்கிறார்கள்.