அப்போ புரியல! இப்போ புரியுது! சாரி சொல்லி அஷ்வின் வெளியிட்ட வீடியோ...
aswin
television
cookwithcomali
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் வாய்ப்பு பெற்று பிஸியாக இருப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அப்படி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்வித் கோமாளி மூலம் பலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர்.
அந்நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பு தற்போது புகழ், பவித்ரா, தர்ஷா, ஷிவானி, பாலா, சரத், அஸ்வின், ஷாகிலா போன்றவர்களுக்கு பெரிய இடத்தினை கொடுத்துள்ளது. அப்படி அஸ்வினுக்கு பல படங்கள் கிடைத்தும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் அவரின் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது 40 இயக்குனர்கள் கதை கூறியபோது தூங்கிவிட்டேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பலர் கடுமையாக விமர்சித்தும் கேலி செய்தும் வந்தனர். தற்போது இது குறித்து விளக்கத்துடன் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் அஸ்வின்.