அப்பா பெயரை காப்பாற்ற துடிக்கும் பையன்! தனுஷ் படத்தால் சிக்கித்தவிக்கும் அதர்வா முரளி...

Atharvaa Dhanush
1 மாதம் முன்
Edward

Edward

மறைந்த நடிகர் முரளியின் வாரிசாக பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார் அதர்வா முரளி. இப்படத்தினை அடுத்து எப்படியாவது அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஆண்டு ஒரு படத்தில் நடித்து வெளியாகியது.

ஆனால் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. சமீபத்தில் கூட தள்ளிப்போகாதே படத்தில் நடித்து தோல்வியையும் கண்டார். இதற்கு கிடையில் மது, நடிகைகளுடன் சகவாசம், ஷூட்டிங்கிற்கு தாமதம் என சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாத அதர்வா இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்றாலும் தனுஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படம் படுதோல்வியை சந்தித்தது.

இயக்குனருக்கும் தனுஷுக்கும் இப்படம் பெரிய அடியை கொடுத்ததால் அதர்வா சற்று குழப்பத்தில் ஆடியுள்ளாராம். ஏனென்றால் மாறன் படத்தின் தோல்வியால் இந்த படத்தினை வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் தான் அதர்வாவின் நிறங்கள் மூன்று படம் 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கெல்லாம் காரணம் கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியால் தோல்வியான மாறன் படம் தான். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.