களவாணியாக மாறிய அட்லீ.. பாலிவுட் சென்றும் மாறவில்லையா.. சிக்கலில் ஷாருக்..

Shah Rukh Khan Atlee Kumar
By Edward Nov 04, 2022 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. நண்பன் படத்தில் உதவி இயக்குனராக இருந்து ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தார்.

இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார். இப்படத்தில் கதை திருட்டு புகாரிலும் சிக்கிய அட்லீ தமிழ் நடிகர்களின் வாய்ப்பை இழந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த பிரச்சனைகளால் தடங்கள் ஏற்பட்டது.

தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணிக்கம் நாராயணன் என்ற தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று அட்லீ எடுக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என்று புகாரளித்துள்ளார்.

Gallery