பாலிவுட் போனது கோடியில் புறளும் அட்லீ!! பிறந்த மகனுக்காக இத்தனை கோடியில் பிரம்மாண்ட வீடு
இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் அட்லீ. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றப்பின் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.
தமிழ் நடிகர்கள் வாய்ப்பு கொடுக்காத நிலையில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை எடுத்து வருகிறார். செப்டம்பர் 7ல் வெளியாகவுள்ள ஜவான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில் அட்லீயின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றார் அட்லீயின் மனைவி பிரியா. குழந்தைக்கு மீர் என்று ஷாருக்கான் அவரது தந்தை பெயரை வைத்திருந்தார்.
குழந்தை பிறந்த கையோடு மும்பையில் 38 கோடி செலவில் புதிய வீடு ஒன்றினை அட்லீ - பிரியா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் போனது அங்கேயே செட்டிலாக அட்லீ புதிய வீடு வாங்கியுள்ளது கோலிவுட்டில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
ஜவான் படத்திற்காக அட்லீ 30 கோடிக்கும் மேல் சம்பளமாக பெறவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.