கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. கான் சூப்பர் ஸ்டார்களை நம்பி மும்பையில் செட்டிலாகும் அட்லீ..
இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இப்படத்தினை அடுத்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் பிளாக்பஸ்டர் படத்தினை கொடுத்தார்.
அதன்பின் தமிழில் முன்னணி நடிகர்கள் வாய்ப்பில்லாமல் இருந்த அட்லீ பாலிவுட் பக்கம் சென்று நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் படத்தினை இயக்க ஆரம்பித்தார். விஜய் சேதுபதி, நயன் தாரா, யோகி பாபு உள்ளிட்ட பல நடித்து வருகிறார்.
அட்லீ இப்படத்தினை முடித்துவிட்டு தமிழ் பக்கம் திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானிடம் சென்று ஒரு கதையை கூறியிருக்கிறாராம்.
சல்மான் கானுக்கும் கதை பிடித்து போக கூடிய விரைவில் இருவரின் கூட்டணி ஆரம்பிக்கவுள்ளதாம்.
ஜவான் படத்தை முடித்துவிட்டு விஜய் பக்கம் வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அட்லீ இரு பாலிவுட் ஹீரோக்களை கைக்குள் அடைக்கி இருக்கிறார்.