என்ன அட்லீ உங்கல போய் இப்படி செஞ்சிட்டாரே கிங்காங்! நம்பவைத்து ஏமாற்றிய பிரபல நடிகர்
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் சிஷ்யப்பிள்ளையாக நண்பன் மற்றும் எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ குமார். இப்படத்திற்கு பிறகு ஆர்யா, நயன் தாராவை வைத்து ராஜா ராணி படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.
காதல் படத்தில் இருந்து நடிகர் விஜய்யின் தெறி படத்தினை இயக்கினார். அப்படமும் வெற்றி பெற்று பல நூறுகோடி வசூல் பெற்றது. இதன்பின் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என ஹார்டிக் படத்தை கொடுத்தார். இப்படங்கள் வேறொரு படத்தை வைத்து அட்லீ காப்பி அடுத்துள்ளார் என்ற சர்ச்சையிலும் சிக்கினார்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத அட்லீ, பாலிவுட் உலகின் முன்னணி மற்றும் கிங்காங்-காக விளங்கி வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தினை இயக்க கமிட்டாகினார். இதற்காக இரு வருடங்களுக்கு முன்பே மும்பைக்கு சென்று ஷாருக்கானுடன் கதை உரையாடல் செய்து படத்தினை உறுதிப்படுத்தினார். ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிக்க கமிட்டாகினார்.
கடந்த ஆண்டு இரண்டாம் அலை நின்ற பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் ஆரம்பமானது. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஷாருக்கான் மகன் ஆர்யான் போதை பொருள் விவகாரத்தில் மாட்டிக்கொண்டதால் தனிப்பட்ட விஷயத்திற்காக அட்லீ படம் நின்று போனது. அதன்பின் ஷாருக்கான் பதான் படத்தின் வேலைகளில் மும்முரம் காட்டினார்.
இதனால் அட்லீ படம் அப்படியே நிலுவையில் விடப்பட்டது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சிய கொடுத்துள்ளது. இதை சிலர் கண்டபடி கலாய்த்து வருகிறார்கள்.