மனைவியுடன் ராஜ வாழ்க்கை! பிரபல நடிகரால் கோடியில் புரளும் இயக்குனர் அட்லீ..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தளபதி விஜய்யுடன் மூன்று படத்தை இயக்கி கோடியில் சம்பளம் வாங்கினார்.
அதேசமயம் காப்பி நடிகர் என்ற பெயரை எடுத்து சிக்கினார். தற்போது பாலிவுட் சினிமாவின் கிங்காங் என அழைக்கப்படும் ஹாருக்கானை வைத்து லயன் என்ற படத்தினை இயக்கி வருகிறார். நயன் தாரா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது கொரோனா காலம் என்பதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அட்லீ மும்பையில் மனைவியுடன் வசித்து வருகிறார். அதற்காக ஷாருக்கான் தாஜ் ஓட்டலில் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்.
அதிலும் சமீபத்தில் துபாய் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மனைவியுடன் சென்று ஆடம்பர வாழ்க்கையில் உச்சத்தை தொட்டுள்ளார். அப்படம் மட்டும் வெற்றி பெற்றால் பாலிவுட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்துவிடுவார் அட்லீ.