நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சியில் அட்லீ மனைவி நடிகை பிரியா...
தமிழ் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து திரைப்படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா மோகன். பல ஆண்டுகளாக நண்பராக இருந்த இயக்குனர் அட்லீ குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜா ராணி படத்திற்கு பின் அட்லீயை திருமணம் செய்து அவருக்கு துணையாக இருந்த பிரியா கணவருடன் ஜவான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் பல ஆண்டுகளாக மும்பையில் செட்டிலாகினார்.
அதன்பின் திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் பிரியா. அவர்கள் பெற்றோர்கள் ஆனதை பலர் பாராட்டியதை போன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானும் வாழ்த்து தெரிவித்தார். ஜவான் படத்தின் 1000 கோடி வசூலை தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீ மிகப்பெரியளவில் பேசப்பட்டார்.
பல மேடைகளில் தான் இந்த இடத்திற்கு வர உறுதுனையாக இருந்தது தன் மனைவி பிரியா என்று எமோஷ்னலாக பேசியிருந்தார். இந்நிலையில், அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர் அட்லீ - பிரியா.
அங்கு கிளாமர் ஆடையில் ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது கிளாமர் லுக்கில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிரியா அட்லீ.