அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்!! முதல் நாள் வசூலில் வாரி சுருட்டிய ஜேம்ஸ் கேமரூன்..
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி உலகளவில் பல மொழிகளில் ரிலீஸாகியுள்ள படம் தான் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

2025ல் இந்தியாவில் மிகப்பெரிய தொடக்க வசூலை பெற்ற ஹாலிவுட் படம் என்ற பெயரை எட்டியுள்ளது அவதார் 3. டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்தை பெரிய வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியிருக்கிறது அவதார் 3.
இந்தியாவில் மட்டும் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படம் சுமார் ரூ. 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேநேரத்தில் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ. 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.

அந்தவகையில் டாப் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் : தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் 16.5 கோடி ரூபாய் வசூலை தட்டித்தூக்கியுள்ளது அவதார் 3. மேலும், ரஜினிகாந்தின் கூலி படத்தின் மொத்த வசூலான ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸை அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் படம் உடைத்துள்ளது.