பிக்பாஸ் 9ல் டிவிஸ்ட்!! பிரஜன், ரம்யா, வியானாவை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இவர் தான் டைட்டில் வெல்வார் என்று ரசிகர்கள் கணிக்கும் அளவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இதுவரை விளையாடவில்லை என்ற கருத்து தற்போது வரை எழுந்து வருகிறது.

கடந்த சில வாரங்களில் பிரஜன், ரம்யா ஜோ, வியானா போன்றவர்கள் எவிக்ட்டாகி பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறினர். இந்த வாரம் யார் எவிக்ட்டாகி வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
FJ அல்லது சாண்ட்ரா
இந்நிலையில் குறைவான வாக்குகள் பெற்றுள்ள FJ அல்லது சாண்ட்ரா இருவரில் ஒருவர் எவிக்ட்டாகி வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் FJ தான் வெளியேறினால் நன்றாக இருக்கும் என்று பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது வந்த தகவலின்படி, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாகவும் அடுத்த வாரம் 11 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் வரவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், 56 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறிய ஆதிரை மீண்டும் 76வது நாளில் எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறாராம். மேலும், ஆதிரைக்கு பின் FJவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளாராம்.