AVM-ஐ இழுத்துமூட ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்ட AVM சரவணன்!! அடுத்து நடந்தது இதுதான்...
மறைந்த AVM சரவணன்
AVM சரவணனின் மறைவு தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருகிறது. அவரின் மறைவுக்கு ரஜினிகாந்த், முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் AVM உடலுக்கு இறுதி அஞ்சலி செலித்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள். இன்று டிசம்பர் 4 பிற்பகல் 3.30 மணிக்கு இறுதி மரியதை செலுத்தப்படவுள்ளது.

இப்படி இருக்கையில், AVM சரவணன் குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சிக்கு மறைந்த AVM சரவணன், மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது குறித்த பேட்டி வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஜெயலலிதா கொடுத்த தைரியம்
அதில், நான் நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் படத்தை தயாரித்தப்போது பைரசியால் படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். உடனே, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதினேன். எங்களால் முடியவில்லை. நாங்கள் ஸ்டூடியோவை மூடி விடலாமா என்ற எண்ணம் வருகிறது என மிகவும் வருத்தப்பட்டு அந்தக் கடிதத்தை எழுதி நான் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதன்பின் அந்த கடிதத்தை நான் மறந்துவிட்டேன்.

ஒருநாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அழைத்ததால் அவரை பார்க்க சென்றேன். அப்போது 15 நிமிடங்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, எதற்கு என்னை வரச்சொன்னீர்கள் என்று நான் தான் கேட்டேன். உடனே அவர், நான் எழுதிய கடித்ததை எடுத்துக்காட்டி, இந்தியாவில் பழமையான ஸ்டூடியோ என்றால் அது உங்களின் AVM தான். இது தமிழ்நாட்டுக்கே பெருமை. அப்படியிருக்கும்போது நீங்கள் திரைத்துறையில் இருந்து வெளியேறக்கூடாது.
பல நல்லநல்ல படங்களை கொடுத்த நிறுவனம் உங்களுடது, எனவே நீங்கள் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பைரசிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதி அளித்தார். நாங்கள் இன்றுவரை ஸ்டூடியோவை வெற்றிக்கரமாக நடத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த தைரியம் தான் மிகவும் முக்கியமான காரணம். எங்கள் நிறுவனம் என்றைக்கும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் AVM சரவணன்.