அயலிக்காக நின்ற அத்தை.. உதய பெருமாளை டார்ச்சர் செய்யும் செல்வநாயகி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரித்திகா அயலியை கொல்ல விஷயத்தை வரவைத்த நிலையில் இந்த விஷயம் கேட்டு செல்லம்மா அவளை அறைய இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

செல்லம்மா ரித்திகாவை அறைந்ததை பார்த்த அயலி அத்தை தனக்காக பேசியதை பார்த்து சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம் செழியன் கோவிலில் எனக்கும் வேண்டுதல் இருக்கு நானும் கோவிலுக்கு வரேன் என்று சொல்ல இந்திராணி இந்த கதை எல்லாம் வேண்டாம் நானும் என்னுடைய பொண்ணும் மட்டும் கோவிலுக்கு போயிட்டு வரோம் என்று சொல்கிறாள்.
அதைத்தொடர்ந்து அயலி ரூமில் நடந்ததை நினைத்து பீல் செய்து கொண்டிருக்க அங்கு வந்த சிவா என்னாச்சு என்று கேட்டு நல்ல விஷயம் தானே என அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். பிறகு மேல் காணாமல் போன விஷயம் செல்லம்மாவுக்கு தெரிய வர அவர் சிவாவை சந்தித்து வேல் காணாமல் போயிடுச்சு..
எப்படி ஆச்சு கண்டுபிடிச்சு கொடுங்க, அப்ப தான் ரித்திகாவும் அயலியும் இந்த வீட்டில சந்தோஷமா வாழ முடியும் என்ன சொல்ல சிவா கண்டிப்பாக கண்டுபிடித்து தருகிறேன் என ஆறுதல் சொல்கிறான். தொடர்ந்து உதயப் பெருமாள் பேப்பர் படித்துக் கொண்டிருக்க செல்வநாயகி சொத்து மொத்தம் என் பையனுக்கு வந்தாகணும் இல்லனா..

இப்பவே போய் இந்திராணி கிட்ட பேசுறேன் என சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.