செழியன் கொடுத்த கிப்ட்.. மோனிகா குறித்து உடைந்த உண்மை - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குடும்பத்தினர் எல்லோரும் வேல் சாற்றுவதற்காக கோவிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மேல் சாற்றிய பிறகு செழியனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் சொன்ன இடத்திற்கு செல்ல ஒரு ஆதாரம் கிடைக்கிறது.
அந்த ஆதாரத்தை செழியன் இந்திராணியுடன் கொடுக்க அதை ஓபன் செய்து பார்க்கும் போது மோனிகா அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருபவர் மோனிகா குறித்து முக்கியமான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்க அன்று அந்த மோனிகா என்ன காளியப்பன் என் ஆபீஸ்ல இருந்துகிட்டு என்னை பத்தியே இப்படி பேசலாமா? இன்று அவனை பாட்டிலா நடித்து கொலை செய்து கேமராக்களை தூக்கி போட்டு உடைக்கிறாள்.

ஆனால் இது அத்தனையும் செழியன் கொடுத்த பென் கேமராவில் பதிவாகி இருப்பது தெரிய வருகிறது.
இந்தப் பென் கேமராவைத்தான் செழியன் இந்திராணியுடன் கொடுக்கிறான். இதைப் பார்த்த இந்திராணி இப்பதான் முதல்முறையா ஒரு உருப்படியான விஷயத்தை செய்து இருக்கீங்க என பாராட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.