வா வா பக்கம் வா..அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது!! ரீசெண்ட் போட்டோஷூட்..
மதுமிதா H
2017ல் கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த Shani என்ற தொடரில் நடித்து அறிமுகமாகியவர் தான் மதுமிதா. கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானார் மதுமிதா.
தமிழில் சன் தொலைக்காட்சியில் 2022ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவரின் ரோல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் மதுமிதா. கடந்த ஆண்டு முடிந்த எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த பாகத்தில் அவர் நடிக்காதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது.
ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மதுமிதா, தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் நிலா ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் மிகப்பெரிய ஆதரவை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, வெள்ளைநிற சேலையணிந்து வா வா பக்கம் வா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதேபோல் அதே சேலையில் எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.