போதையில் கட்டிப்பிடித்தபடி 18 பேர்!! சென்னை ஸ்டார் ஹோட்டலில் சிக்கிய இசையமைப்பாளரின் மகள் கைது..
இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பண்ணைவீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள், நைட் பார்ட்டி, இசை விருந்து என பல பெயர்களில் நடக்கும் இரவுநேர விருந்துகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு சீரழிவது தொடர்ந்து வருகிறது. அப்படி அக்டோபர் 6 ஆம் தேதி போலிஸ் ரைடில் 18 பேர் கைதாகியுள்ள சம்பளம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இரவு கஞ்சா பார்ட்டி
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் செயல்பட்டு வரும் பப்பில் நேற்று முன் தினம் இரவு கஞ்சா பார்ட்டி நடந்ததாக போலிசாருக்கு தகவல் வர, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கிருந்த அறைகளில் சோதனையிட்டபோது அங்கு ஒருவரும் இல்லை, பின் பப்புக்கு வந்தவர்கள் அருகிலுள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு போலிசார் சென்றுள்ளனர்.
அங்கு 3 பெண்கள் உட்பட 18 பேரையும் போலிசார் சுற்றி வளைத்து விசாரித்ததில், எல்லோரும் பப்பில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று, மெத்தபெட்டமைன், கஞ்சா பயன்படுத்தியதும் உறுதி செய்து 18 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் 3 கார்கள், 2 பைக், 18 செல்போன்கள், கஞ்சா போதைப்பொருட்கள் என போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தற்போது கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கட்டிப்பிடித்துக்கொண்டு
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறதாம். இங்கு போதைப்பொருட்களுடன் பார்ட்டி நடந்தப்பின் பப்பில் பார்ட்டி முடிந்துவிட்டு அதே ஸ்டார் ஹோட்டலில் 2 ரூம்களை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதன்பின் அவர்கள் புக் செய்த 2 ரூம்களுக்கு சென்ற போலிசார், இளம்பெண்கள், இளைஞர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். உடனே மகளிர் போலிசார் வழவழைக்கப்பட்டு 15 இளைஞர்கள் உட்பட 3 இளம்பெண்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் குரூப்பில் நண்பர்களாக இருப்பவர்களாம்.
இசையமைப்பாளரின் மகள்
இவர்களில், அனந்தபுரத்து வீடு படத்தின் இசையமைப்பாளரின் மகள் பிரவலிகா(23) தான் பார்ட்டியை வைத்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரவலிகா, பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை செய்து சூளைமேட்டில் லேடீஸ் ஹாஸலில் தங்கியுள்ளாராம். இவர்களுக்கு யார் கஞ்சா, பெத்தபெட்டமின் சப்ளை செய்தது என்று ஹோட்டல் மேனேஜர், பார்ட்டி வைத்த இசையமைப்பாளரின் மகளிடம் விசாரணையை போலிசார் நடத்தி வருகிறார்கள்.