போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவர். தமிழில் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர், இந்த ஆண்டு கூலி படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும், வசூலில் ரூ. 500+ கோடி ஈட்டியிருந்தது. ஆனாலும், இப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போயஸ் கார்டனில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வீடு இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அந்த வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்நிலையில், அதுகுறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் விலை மதிப்பு ரூ. 40 கோடி - ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.