வெளியான சில தினங்களில் OTTக்கு வந்த தனுஷின் இட்லி கடை படம்.. எப்போது?

Dhanush Tamil Actors OTT Platforms Idli Kadai
By Bhavya Oct 08, 2025 05:30 AM GMT
Report

தனுஷ்

நடிகர் மற்றும் இயக்குநராக தனுஷ் சமீபகாலமாக மிகவும் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்கத்தில் பா. பாண்டி வெளிவந்ததை தொடர்ந்து அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பின் ராயன் வெளியானது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது. இவருடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இட்லி கடை வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த 1ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான சில தினங்களில் OTTக்கு வந்த தனுஷின் இட்லி கடை படம்.. எப்போது? | Dhanush Idli Kadai Movie Ott Release

எப்போது? 

இந்நிலையில், இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.   

வெளியான சில தினங்களில் OTTக்கு வந்த தனுஷின் இட்லி கடை படம்.. எப்போது? | Dhanush Idli Kadai Movie Ott Release