இதுக்கு மேல இந்த வீட்ல இருக்க முடியாது!! சோழனால் வீட்டைவிட்டு வெளியேறிய நிலா..
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற நிலா, முதலில் சோழனுடன் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறி வந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பிரமோவால் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சோழன், காவலர் ஒருவரிடம் எப்படி நிலாவை திருமணம் செய்து கொண்டேன் என்பதை கூற, மறைந்திருந்து பார்த்த நிலா அனைத்தையும் கேட்டுள்ளார்.
நீதிபதி ஒன்றாக வாழ்கிறீர்களா? என்று நிலாவிடம் கேட்க, விவாகரத்து வேண்டும் என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன்பின் வீட்டிற்கு வந்த நிலா, அய்யனார் துணை குடும்பத்தினரிடம், என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட விஷயம் இப்போதுதான் தெரிந்துகொண்டே என்று சோழனை கண்டபடி திட்டி வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க, அடுத்த என்ன நடக்கப்போகிறது? என்று வரும் நாட்களில் தான் தெரியும்.