சின்ன ரோலுக்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண கேட்டாங்க..வேண்டானு சொன்னாலும்! அய்யனார் துணை நடிகை...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பிரசாத். யூடியூப் மூலம் பிரபலமான ரேஷ்மா சினிமா துறையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

அய்யனார் துணை ரேஷ்மா
அதில், நான் முதலில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோதெல்லாம் எனக்கு ஒரு சின்ன ரோலில் நடிக்ககூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ரெஸ்யூம் கொடுக்கும் போதுகூட அட்ஜஸ்ட்மெண்ட் ஓகாவா என்று ஒரு கேள்வி வைத்திருக்கிறார்கள். அதற்கு நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் ஓகாவான்னு ஓபனாகவே கேட்பார்.
எந்தவொரு குற்ற உணர்ச்சியோ அல்லது பயமோ, வருத்தமோ இல்லாமல் அவங்க கேட்பாங்க. அப்போ நான் ரெஸ்யூமில் இல்லை முடியாது என்று சொல்லி இருக்கேனே என்று சொன்னால், அவங்க அப்படியா நாங்க வேலை பிசில கவனிக்கவில்லை, எங்களுக்கு மேல் இடத்தில் இருந்து கேட்டாங்க. அதை சொல்றதுக்காகத்தான் உங்ககிட்ட பேசுறோம் என்று மீண்டும் கேட்பாங்க. நாம முடியாதுன்னு சொன்னா போனை வச்சுடுவாங்க, பின் வாய்ப்பே இல்லாமல் போயிடும்.

அப்படி ரொம்ப நாள் ஆச்சு அந்த நேரத்துல என் அம்மா தான் எனக்கும், என் குடும்பத்தின் செலவுக்கும் மொத்தமாக கவனிச்சாங்க. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது, வெப் தொடர், ஷார்ட் பிலிம், சீரியல்கள் என்று அடுத்தடுத்து வர தொடங்கியது. அதன்பின் இப்போது சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தாலும் ஆரம்பத்தில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை எனக்கு பெரிய மன நெருக்கடி கொடுத்தது என்று ரேஷ்மா கூறியிருக்கிறார்.