அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே, உங்களுக்காக வந்திருக்கும் இந்த நல்ல செய்தியை கேட்டீங்களா!!

Serials Tamil TV Serials Ayyanar Thunai
By Kathick Feb 04, 2026 06:30 AM GMT
Report

விஜய் டிவியில் வெற்றிகரமாக TRP-யில் டாப்பில் இருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் வானதியை யாருக்கும் தெரியாமல் பாண்டியன் பெங்களூருக்கு அழைத்து சென்றது பெரும் அதிர்ச்சியை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தது.

அதே போல் தற்போது சோழன் - நிலா - ராகவ் பிரச்சனையில், ராகவ் தன்னிடம் 'நிலா என்னுடைய ஆளு' என கூறியதை நிலாவிடம் சோழன் கூறிவிட்டார். இதனால் கோபத்தில் இருக்கும் நிலா, நேரடியாக ராகவ்விடம் சென்று சோழன் தன்னுடைய கணவர் என கெத்தாக கூறுகிறார். இதனை புரோமோ வீடியோவில் காட்டியிருந்தார்.

அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே, உங்களுக்காக வந்திருக்கும் இந்த நல்ல செய்தியை கேட்டீங்களா!! | Ayyanar Thunai Serial Sunday Special

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், நல்ல செய்தி என்னவென்றால், வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது என அறிவித்துள்ளனர். கண்டிப்பாக இந்த ஞாயிற்றுக்கிழமை அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 

அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே, உங்களுக்காக வந்திருக்கும் இந்த நல்ல செய்தியை கேட்டீங்களா!! | Ayyanar Thunai Serial Sunday Special