சூப்பர்ஸ்டார் மகள் தயாரித்துள்ள 'வித் லவ்' படம் எப்படி இருக்கு? ரஜினியின் விமர்சனம்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்தான் 'வித் லவ்'. டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக, இவருடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் கதைக்களத்தில் உருவாகி வருகிற 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை நேற்று மாலை ரஜினிகாந்த் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், படம் எப்படி வந்துள்ளது என கேட்க, 'சூப்பர், படம் சிறப்பாக வந்துள்ளது' என தனது கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.