கமல் ஹாசனை தாக்கிய பிக் பாஸ் அசீம்.. அதுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே

Kamal Haasan Bigg Boss Mohammed Azeem
By Dhiviyarajan Feb 11, 2023 08:19 AM GMT
Report

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 6 நிறைவடைந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இறுதி சுற்றுக்கு அசீம், விக்ரமன், ஷிவின் தேர்வானார்கள். கடைசியில் அதிக ஓட்டுகள் வாங்கி அசீம் டைட்டில் பட்டத்தை வாங்கினார்.

இந்த சீசனும் மற்ற சீசன் போல பல சண்டைகள் நடந்தது. அதிலும் அசீம் பல மோசமான வார்த்தையால் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை தாக்கினார். இதனால் பிக் பாஸ் தொகுப்பாளராக இருக்கும் கமல் ஹாசன், பல முறை அசீமை கண்டித்தார்.

மேலும் அவர், "உங்களின் செயலை பார்த்து தான் உங்கள் மகன் வளருவார். அதனால் இது போன்று சண்டைகளில் ஈடுபட வேண்டாம்" என்று கமல் அறிவுரை கூறினார்.

கமல் ஹாசனை தாக்கிய பிக் பாஸ் அசீம்.. அதுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே | Azeem Speak Against Kamal Haasan

அசீம் பேட்டி 

சமீபதத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசீம், கமல் ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதில் அவர், " நான் ஷோவில் கோபப்படுவதை பார்த்து தான் உன் மகன் வளர்கிறான் என்று பலரும் சொன்னார்கள்".

"நான் என் குழந்தையிடம் பல நேரம் செலவிடுவேன். இந்த ஷோவை பார்த்து தான் என்னுடைய மகன் வளரனும் அவசியம் இல்லை" என்று கோவமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.