பாக்யா எக்கேடு கெட்டா எனக்கென்ன! எனக்கு ராதிகா தான் முக்கியம்! கோபி மைண்ட் வாய்ஸ்
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீர்யல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த சீரியல் அனைத்து தரப்பு வயதினரையும் ஈர்த்து வருகிறது.
கள்ளக்காதலில் இருந்து குடும்பத்திற்கும் மனைவிக்கு துரோகம் செய்து வரும் கோபி கதாபாத்திரத்தை கண்டாலே ரசிகர்கள் கோபமடைகிறார்கள். காதலிக்காக மனைவியிடன் விவாகரத்து பத்திரத்தில் எப்படி கையெழுத்து வாங்குவது என்று குழம்பி வருகிறார் கோபி.
அப்படியொரு சூழ்நிலை கிடைக்க அப்பாவியான பாக்யா கணவர் கையெழுத்து போடவேண்டும் என்று கேட்டது எதுல சொல்லுங்க என்று கூறி காட்டுற இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.
நீங்கள் தானே போட சொன்னீங்க என்று அப்பாவி முகத்துடன் இருக்கிறாரே என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். சுயநலத்துக்காக நல்ல மனைவியை இப்படி செய்கிறாரே என்று கோபியை திட்டியும் வருகிறார்கள்.