கட்டிபிடி வைத்தியம் இப்படி வேலை செய்யுதே! ராதிகாவை நாசுக்காக மடக்கிய கோபி..
குடும்ப இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பற்றி மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருவது பாக்யலட்சுமி. மனைவியை விட்டுவிட்டு காதலித்த காதலியுடன் நெருக்கமாக பழகி வரும் கோபியை எதிர்த்து அவரின் அப்பா பேசியும் வேலைக்காகவில்லை. இதனால் கோபி அப்பா ஊருக்கு சென்றுவிட்டார்.
இதை சாமத்தியமாக பயன்படுத்திய கோபி அம்மாவின் கட்டாயத்தின் பேரில் பாக்யாவுடன் விருந்து ஒன்றிக்கு சென்று சந்தோஷமாக இருந்துள்ளார். திடீரென அங்கு வந்த ராதிகா கோபி பாக்யா கொஞ்சி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து கோபத்தில் வீட்டிற்கு சென்று எல்லாமே பொய் நாடகம் என்று கூறி அழுதுள்ளார். ராதிகாவை பார்க்க அடுத்த நாள் வந்த கோபியை விரட்டி விட்டும் அடுத்தடுத்த நாள் சென்று ராதிகாவிடம் கோபி சமாதானப்படுத்துகிறார்.
போறப்போக்கில் ஆஸ்காருக்கு நடிப்பது போன்று ராதிகாவிடம் அழது புலம்பி நீலிக்கண்ணீர் விடுகிறார் கோபி. இதை பயன்படுத்தி கோபி ராதிகாவை நாசுக்காக கட்டியணைத்தபடி என் வீட்டில் இருக்கும் போது சந்தோஷமாக இல்லை நிம்மதியாகவும் இல்லை.
உங்களுடன் இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் வேணும்னா நான் மயூவை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் குழப்பத்தில் ராதிகா என்ன கூறுவது என்று தெரியாமல் முழுத்து ஏற்றுக்கொள்கிறார்.
உருட்டுக்கு இன்னொரு பெயர் கோபி! ?
— Vijay Television (@vijaytelevision) November 13, 2021
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/zyWhmvwhJs