கோபி பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இது தான் காரணமா!! அப்போ அதெல்லாம் பொய்யா?
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறப்பாக சென்று கொண்டிருக்க முக்கிய காரணமாக இருப்பது கோபி கதாபாத்திரம் தான்.
கோபி ரோலில் பிரபல சீரியல் நடிகர் சதீஷ் நடித்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகிறார். ஆனால் திடீரென பாக்கியலட்சுமி கோபியாக இனி நானில்லை என்றும் தனிப்பட்ட காரணத்திற்காக சீரியலில் இருந்து விலகி இருப்பதாக கூறி வீடியோவை பகிர்ந்தார்.
இது தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், சதீஷ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருதுவிழாவில் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது நடிகர் சதீஷ், தன்னை முட்டாள் என்று கூறியபடி ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் நிறைய எதிர்ப்பார்ப்புகள் வந்தாலே ரொம்ப கஷ்டம். ஆனால் நேற்றுவரையில் நான் படித்தது எல்லாம் நினைத்து அதிமுத்திசாலி என்று நினைத்தேன்.
ஆனால் நான் ஒரு முட்டாள் என்று தெரிந்துகொண்டேன், நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியும் என்ற கருத்தினை கூறியிருக்கிறார் சதீஷ்.