பாக்யாவால் கோபியை விரட்டி விட்ட ராதிகா.. இதுக்கு தான் இரண்டாம் திருமணம் பண்ணிங்களா மேடம்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு கிடைத்த நேரத்தில் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி.
திருமணத்தை முடித்த கையோடி ஊட்டி ஹனிமூனிற்கும் ராதிகாவை கூட்டிச் சென்றுள்ளார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி மகாசங்கமம் ஆரம்பிக்க கோபியின் சுயரூபத்தை மூர்த்தி உள்ளிட்டவர்கல் அறிந்து கடுமையாக அசிங்கப்படுத்தியிருந்தார்.
இதனால் அவமானம் தாங்க முடியாமல் ராதிகாவும் கோபி மீது கோபப்படுகிறார். இது பக்கம் முடிந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் ராதிகாவை விட்டுவிட்டு பாக்யாவை மேடையில் கூப்பிட்டு கெளரம் செய்ததையும் ராதிகாவால் தாங்க முடியவில்லை.
இதனால் ரூமிற்கு வந்ததும் கோபியிடம் வாக்குவாதம் செய்ய, கோபத்தில் எல்லைமீறி ராதிகாவிடம் கை நீட்டியுள்ளார்.
இதனால் கோபியை ரூமைவிட்டு வெளியேற சொல்லியுள்ளார் ராதிகா. இதற்குத்தான் திருமணம் செஞ்சீங்களா ராதிகா என்று ரசிகர்கள் கண்டபடி கேள்வி கேட்டு வருகிறார்கள்.