முழு வில்லியாக மாறி அசிங்கப்படுத்தும் ராதிகா!! டார்ச்சர் தாங்கமுடியாத கோபி..
குடும்பத்துடன் அனைவரும் பார்க்கத் தூண்டும் சீரியல் ஒன்றாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் தற்போது கோபி, ராதிகாவுடன் பாக்யா வீட்டில் தங்கியிருக்கிறார்.
தன்னுடைய சொந்த வீடுபோல் ராதிகா செய்யும் அராஜக காட்சிகள் அனைவரையும் கொஞ்சம் எரிச்சலூட்டவும் செய்து வருகிறது. அப்படி காபி குடிக்க கூட முடியாமல் ராதிகாவால் கஷ்டப்பட்டு வரும் கோபிக்கு, அவரது அம்மா காபி போட்டுக்கொடுத்துள்ளார்.
அதை இனியா சென்று கோபிக்கு காபி கொடுத்துள்ளார். வாசனையை பார்த்ததும் ஆசையாக குடிக்க நினைக்கும் போது, ராதிகா அந்த காபியை கையால் தட்டிவிட்டுள்ளார்.
கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்று கூறும் அளவிற்கு கோபி அதை நினைத்து ஏங்கியிருக்கிறார். ஆசையால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதிகாவால் டார்ச்சர் அதிகமாகிவிட்டதே என்று பைத்தியமாகிவிட்டார் கோபி.
எவ்வளவு தான் ராதிகாவை பார்த்து எரிச்சல் அடைந்தாலும் கோபியின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்க்கிறோம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.