சாராயம் காச்சினால்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்..
TVK விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஆளுநர் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயலை கவனித்த சினிமா பிரபலங்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சுரேஷ்
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் சுரேஷ் ஒரு வீடியோவை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரெளடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா, அது தானா தகுதியா? என்று கேள்வி கேட்டுள்ளார்.
வாழ்க்கையிலும் அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய முதலில் நல்ல மனசு வேண்டும். சாதி, மதம், இனம் எதையும் பாராமல் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே அது மிகப்பெரிய தகுதிதான். இது அரசியலுக்கு மட்டுமில்லை, வாழ்க்கையில் நல்ல அப்பாவாகவும் நல்ல அம்மாவாகவும், நல்ல நண்பனாகவும் இருக்கக்கூட நல்ல மனசு தேவை. மனசு சுத்தமாக இருந்தால் போதும்.

ஆல் தி பெஸ்ட்'
நான் இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வந்தேன். அது கட்சிக்காக மட்டுமில்லை, புரட்டித் தலைவர் எம்ஜிஆருக்காக, அவர் மீதுள்ள மரியாதைக்காக. ஆனால், இனிமேல் அதே நிலை தொடருமா என்றால் சந்தேகம் தான்.
ஒரு சின்ன பையன் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனித்து நின்று புரட்ச் செய்து வென்றிருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். அவர் நல்ல ஆட்சி செய்யவில்லை என்றால் அதன்பின் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
ஆனால் இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கு, இவர்கள் கொஞ்சம் ஒதுங்கி நின்று மக்களின் முடிவை மதிக்க வேண்டும். 'தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய், ஐ லவ் யூ, நீங்கள் நல்லா வருவீங்க, ஆல் தி பெஸ்ட்' என்று கூறியிருக்கிறார் சதீஷ்.