பார்ட்டிக்கு சென்று பாக்கியாவிற்கு பெரிய ஆப்பு வைத்த இனியா!! பழித்தீர்த்த கோபியின் மனைவி ராதிகா..

Vijay Television Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Jai Jul 24, 2024 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கண்ணோட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார். போட்டி நடந்து கொண்டிருக்கும் போது இனியா தோழியுடன் இரவு பார்ட்டிக்கு செல்ல, அங்கு சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பார்ட்டிக்கு சென்று பாக்கியாவிற்கு பெரிய ஆப்பு வைத்த இனியா!! பழித்தீர்த்த கோபியின் மனைவி ராதிகா.. | Baakiyalakshmi Serial July 24Th Promo Iniya

பின் இந்த சம்பவத்தை அறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் கைது செய்யும் காவல் நிலையம் கூட்டிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதர்ச்சையாக அந்த பக்கம் வந்த ராதிகா போலிசிடம் அண்ணன் மூலம் பேசியதால் இனியாவையும் அவரது தோழிகளையும் வெளியே கூட்டிட்டு செல்கிறார். பின் செழியன் போன் செய்ய, ராதிகா இனியாவிடம் இருந்து போனை வாங்கி பேச, நடந்ததை கூறி லொகேஷனை அனுப்பி வைக்கிறார்.

பின் பாக்கியா வந்ததும் ராதிகா அவரிடம், நான் தான் காப்பாற்றினேன், இப்போ இனியாவை காப்பாத்தலைன்னா அவ ஸ்டேஷனில் இருந்திருப்பா என்று செழியனிடம் சொல்லியுள்ளார். பின் இனியா பப்புக்கு வந்து குடிக்கல என்று கூறி அழைத்து செல்ல முயலும் போது, அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது உன் அம்மாவை வர சொல் என்று ராதிகா கூறியிருக்கிறார்.

பார்ட்டிக்கு சென்று பாக்கியாவிற்கு பெரிய ஆப்பு வைத்த இனியா!! பழித்தீர்த்த கோபியின் மனைவி ராதிகா.. | Baakiyalakshmi Serial July 24Th Promo Iniya

போட்டி முடிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பாக்கியாவிடம் ராதிகா என் மகளை கோர்ட் வரை கொண்டு சென்றீர்கள், இப்போ உங்கள் மகளை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று அவமானப்படுத்தியிருக்கிறார். இதனால் பாக்கியாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.