5 வயசுல தம்பி, பெற்றோர்களின் மரணம்? சீரியலால் படுகேவலமாக விமர்சனத்திற்கு ஆளான சீரியல் நடிகர் சதீஷ்!
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியலில் நல்லது செய்பவர்களை புகழ்வது வில்லி, வில்லன்களை ஏசி பேசுவதும் இருப்பது வழக்கம் தான்.
ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை ரியல் வாழ்க்கையில் கடுமையாக விமர்சித்து திட்டி வருவது தான் அதிகம். அப்படி பலர் மனதளவில் கஷ்டப்பட்டு இருப்பதை போன்று பாக்யலட்சுமி சீரியல் கோபியும் ஃபீல் செய்துள்ளார்.
கோபி ரீல் வாழ்க்கை
பாக்யலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் சதிஷ். சீரியலில், கட்டின மனைவியை விட்டுவிட்டு காதலித்த ராதிகாவுக்காக பல விசயங்களை செய்து வந்தார். அப்படி மனைவி பாக்யாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு முழித்தும் குடும்பத்திடன் அவமானப்பட்டும் என்ன செய்வது தெரியாமல் இருந்துள்ளார்.
மேலும் பாக்யா உங்களுக்கு பிடித்த ஒன்றை இப்போது செய்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டே வெளியேறி விடுகிஆர். இப்படி சீரியல் சென்று கொண்டிருக்கும் போது கோபியாக நடிக்கும் சதிஷை பலர் கண்டபடி திட்டி வருகிறார்கள். இதற்கு தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.
சதிஷ் ரியல் வாழ்க்கை வீடியோ
கோபியை மூஞ்சில ஒருகுத்து தூக்கி அவனை குப்பையில் போடுங்கன்னு சொல்லிவிட்டு, ஒரு முக்கியமான ஒரு பெண்மணி பற்றி கூறப்போகிறேன். அவ பேர் தமிழ். 5 வயசுல தம்பிய இழந்து, பெற்றோரை இழந்து, அனாதையா சென்னைக்கு ஒரு சக்கா ரெண்டு டிரெளசரை வெச்சிக்கிட்டு வந்தேன்.
அப்படி வந்தவனுக்கு என் அத்தை வீட்டில் தான் வளர்ந்தேன். வாழ்ந்தேன். மொழி பேச சொல்லி கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, வருமானம் கொடுத்து, பேர் புகழ், மொழி கொடுத்து ஒன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான்.
என்னை பொறுத்தவரையில் தமிழ், ஒரு மொழி கிடையாது. அது கலாச்சாராம் ஒரு மதம் ஒரு சக்தி , வாழ்க தமிழ் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 வயதில் பெற்றோரை இழந்தேன்.. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்#Baakiyalakshmi #Sathish #Gopi pic.twitter.com/VeYAhz6qk5
— Parthiban A (@ParthibanAPN) July 14, 2022