Sugar Daddy-க்கு அர்த்தம் தெரியல.. நடிகர் பப்லூ பிரித்விராஜ்

Babloo Prithiveeraj
By Kathick Jun 03, 2025 08:30 AM GMT
Report

பிரபல நடிகர் பப்லூ பிரித்விராஜ், ஷீத்தல் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். தன்னை விட 30 வயது குறைவான பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் பப்லூ இருந்ததால், இந்த விஷயம் சர்ச்சையானது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது காதலியுடன் இணைந்து பேட்டியளித்த வந்தார். ஆனால், இதன்பின் இருவரும் பிரிவித்துவிட்டனர். ஷீத்தலுடன் நடிகர் பப்லூ ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது, அவரை Sugar Daddy என நெட்டிசன்கள் அழைத்தனர்.

Sugar Daddy-க்கு அர்த்தம் தெரியல.. நடிகர் பப்லூ பிரித்விராஜ் | Babloo Prithviraaj About Sugar Daddy Controversy

இந்த நிலையில், sugar daddy என்றால் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகர் பப்லூ.

இதில் "பாவம் யாருக்கும் Sugar Daddy-யின் அர்த்தம் தெரியவில்லை. அப்போ என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஜீரோ. நான் ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்ல 20,000 ரூபாய் வாடகை கொடுத்துட்டு இருந்தேன். அப்படி இருக்கும் போது தான் அந்த பொண்ணை நான் சந்தித்தேன். அவங்க அப்பா ஆந்திராவில் போலீஸ் கமிஷனர். அவங்க அம்மா ஒரு லாயர். அந்த பொண்ணு கோடீஸ்வரி. அவங்க என் காசுக்காக வரல. என் அழகுக்கும் அறிவுக்கும்தான் வந்தாங்க. நான் நிறைய காசு வச்சு, பணத்தால் அந்த காதலை வாங்கினால் தான் அதற்கு Sugar Daddy என்று அர்த்தம்" என கூறியுள்ளார். 

Sugar Daddy-க்கு அர்த்தம் தெரியல.. நடிகர் பப்லூ பிரித்விராஜ் | Babloo Prithviraaj About Sugar Daddy Controversy