58 வயது நடிகருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்!! பப்லுவை பிரிந்ததை உறுதி செய்த ஷீத்தல்..
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் ஒருசில முக்கிய சீரியல்களில் நடித்தும் பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். சமீபகாலமாக அவரை பற்றி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 20 வயதை தாண்டிய உடல்நிலை சரியில்லாத மகன் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
அதற்கு பல காரணங்களை முன் வைத்திருந்த பப்லு பிரித்விராஜ், 24 வயதே ஆன ஒரு இளம்பெண் ஷீத்தலுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறி அவருடன் பல பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது. இதுகுறித்து பப்லு பேட்டியொன்றில் எனக்கு பொம்பள சோக்கு கேட்குதா என்று கூறினார்கள்.
ஆனால் எனக்கு அது தேவை, அது எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவது மாதிரி தான், 40 பெண்களை கூட என்னால் திருப்திபடுத்த முடியும் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் இதுகுறித்து பப்லுவிடம் தொடர்பில் இருந்த ஷீத்தல் இது குறித்து எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஷீத்தல் சமீபத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதையோ எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதையோ, வாழ்க்கை இல்லை. வாழ்க்கையானது வாழ்வதற்கு தான் என்று கூறும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் எதை பற்றியும் நான் கவலைப்பட போவதில்லை என்று கூறும் விதமாகவும் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதன்மூலம் பப்லுவை உண்மையாகவே பிரிந்துவிட்டார் என்பதை ஷீத்தல் உறுதிப்படுத்தியதாக இணையத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.