எனக்கு ஒழுக்கத்தை கத்துக்கொடுத்தது தமிழ் சினிமா!! பேட் கேர்ள் பட நடிகை ஓபன்..
பேட் கேர்ள் சாந்தி பிரியா
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அவருடன் துணை இயக்குநராக பணியாற்றிய வர்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பேட் கேர்ள். இப்படத்தின் டிரைலர் ரிலீஸான போதில் இருந்தே பலரும் கடுமையாக விமர்சித்தும் டீசரை நீக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது.
மேலும் படத்தில் பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதால் அதை நீக்கி சென்றார் வாங்கி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
அதன்பின் படத்தின் நாயகியின் தாய் ரோலில் நடித்த சாந்தி பிரியா அளித்த பேட்டியொன்றில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ள நீங்கள், எந்த மொழியில் நடித்தது மிகவும் பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஒழுக்கத்தை கத்துக்கொடுத்தது
அதற்கு சாந்தி பிரியா, ஒவ்வொரு மொழியிலும் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது. ஆனால், நான் தமிழை தேர்வு செய்கிறேன், ஏனென்றால் தமிழ் படங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. பிறந்த குழந்தைப் போலதான், நான் தமிழ் திரையுலகுக்கு சென்றேன். என் அக்கா அங்கு நடித்து வந்தார்.
இருந்தாலும் ஒரு புது வரபாக நான் வந்தபோது எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தது தமிழ் சினிமா தான். எனக்கு ஒழுக்கத்தையும், சரியாக நேரத்தை கடைப்பிடிப்பது, பணிவாக இருப்பது ஆகியவற்றை கற்றுக்கொடுத்தது.
இதற்காக நான் தமிழ் சினிமாவிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதேபோல் இந்தியில் நடித்தபோது எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன என்றும் சாந்தி பிரியா தெரிவித்துள்ளார்.