பதான் படத்தின் பேனர்களை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்கள்..நாளுக்கு நாள் பெருகும் சர்ச்சை
பதான்
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாவும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சர்ச்சை பாடல்
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது, அதில் நடிகை தீபிகா படுகோன் காவி நிற பிகினியை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இதற்கு பல எதிர்மறை கருத்துக்கள் வந்தது. இப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க வேண்டும் இல்லையென்றால் படம் ரிலீஸ் ஆகாது என இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பதான் படத்தின் ப்ரோமோஷனுக்காக வைத்திருந்த பேனர்களை பஜ்ரங் தல் என்ற ஹைதராபாத்தை சேர்ந்த அமைப்பினர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.
— AmuthaBharathi (@CinemaWithAB) January 5, 2023