நான் கடவுள் பட பிரச்சனை!! அஜித்தை ரூமில் வைத்து அடித்தது உண்மையா..பாலா ஓபன் டாக்..
கோலிவுட் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், தற்போது கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். பல இயக்குநர்களுடன் பணியாற்றி வந்த அஜித், இயக்குநர் பாலாவுடன் பணியாற்றியபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படத்தில் இருந்தே விலகினார்.
நான் கடவுள்
நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் நடிக்க கமிட்டாகி ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அஜித்திற்கு பல கண்டீசன்களை போட்டிருக்கிறார் பாலா. நீளமாக தாடி, முடி வளர்க்க வேண்டும் என்று சொல்லியதற்கு அஜித் முடியாது என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்ய தாமதமும் ஏற்பட்டதால் பாலா என்ன தான் செய்கிறார் என்று பார்க்க பாம் குரோ ஹோட்டலுக்கு அஜித் சென்றுள்ளார். அங்கு பாலாவை விசாரித்தபோது அவருடன் திரையுலக நண்பர்களுடன் இருந்துள்ளார் பாலா.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பாலா நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கவும் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சங்கீதாவிற்கு அளித்த பேட்டியொன்றில் பாலா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அஜித்தை ரூமில் வைத்து அடித்தது
ஓட்டல் அறையில் வைத்து அடித்தது குறித்த கேள்விக்கு இயக்குநர் பாலா, நான் அஜித்தை அடித்தேன் என்று சொல்வதெல்லாம் பத்திரிக்கையாளர்களின் கற்பனை. ஆனால் அதேசமயம் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது உண்மை என்று கூறினார்.
மேலும் அப்போ, அந்த அறையில் என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பினார் சங்கிதா. அதற்கு பாலா, அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி, என்னிடம் ஏன் கேட்குறீங்க என்று பாலா கூறியிருக்கிறார்.