பாலாவுக்கு விவாகரத்து கொடுத்த மிகப்பெரிய இடி! சூர்யாவிடம் அந்தமாதிரி நடக்காமல் இருக்க இதுதான்காரணம்

Suriya
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் மறைந்த பாலு மகேந்திராவின் சிஷ்ய பிள்ளையாக சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் பாலா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற வெற்றி படங்களால் தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தினை பிடித்து வந்தார்.

அப்படத்திற்கு பிறகு நாச்சியார் படமும் பெரியளவில் பேசப்படவில்லை. அப்படங்களுக்கு பிறகு பாலா சில காலங்கள் இடைவெளி விட்டுவிட்டு தற்போது சூர்யாவுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார்.

கடல் சம்மந்தபட்ட கதை என்பதால் சூர்யா பாலா படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையோடு ஆரம்பித்து சமீபத்தில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. படப்பிடிப்பு முடிந்து பாலாவும் சூர்யாவும் சென்னை திரும்பியுள்ளனர். இதனை சிலர் இருவருக்கும் சில பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் பரப்பினர்.

ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தான் சென்றுள்ளோம் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று கூறப்பட்டது. இப்படி வதந்திகள் கிளம்ப காரணம் படப்பிடிப்பில் பாலா நடந்து கொள்ளும் விதம் தான் காரணமாம்.

இயக்குனர்கள் பாலா நடிப்பு வர கலைஞர்கள் பாடாய்படுத்தி விடுவாராம். எப்போது ஷூட்டிங் முடியும் என்று கூறும் அளவிற்கு அவரது இயக்கம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது இயக்குனர் பாலா அப்படி நடந்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

முன்புமாதிரி இல்லாமல் சகஜமான இயக்குனாராக மாற முழுக்க முழுக்க விவாகரத்து கொடுத்த பெரிய இடி தான் பாலாவின் இப்படியான நடவடிக்கைக்கு காரணமாம். இதனால் தான் கடந்த 4 ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் இருந்துள்ளாரா என்று பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.